ponmudi

அண்ணா பல்கலை மீதுதான் மாணவர்களுக்கு ஆர்வம் : பொன்முடி

தமிழகம்

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தையே தேர்வு செய்திருப்பதாக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நீட் தோ்வு முடிவு தாமதத்தால், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று(செப்டம்பர் 10) தொடங்கியது.

இன்று தொடங்கியுள்ள கலந்தாய்வு நவம்பர் 13ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,

பொதுப்பிரிவுக்கான முதல்நாள் கலந்தாய்வில் முதல் ரேங்கிலிருந்து 14,524 ஆவது ரேங்க் வரையில் உள்ளவர்கள்  பங்கேற்கிறார்கள். செப்டம்பர் 12- ஆம் தேதிக்குள் அவர்கள் எந்த கல்லூரி வேண்டும் என்பதை தேர்வு செய்யவேண்டும்.

அதன்பிறகு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி விவரங்கள் தெரிவிக்கப்படும்.

அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் ரூ. 15,000 கட்டணத் தொகையை செலுத்தி கல்லூரியில் சேரவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த இடம் காலியாக கருதப்பட்டு அடுத்த வரிசையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இன்று காலை வரை 5,125 பேர் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் 2,761 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தையே தேர்வு செய்திருக்கிறார்கள்.ஒரு மாணவர் 61 கல்லூரிகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார். நீட் தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

மருத்துவப்படிப்பு கிடைக்காத மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரவேண்டும் என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிக்க ஆசைப்படும் மாணவர்களின் கனவை நிறைவேற்றவே 4 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மேலும் அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 11, 150 இடங்கள் உள்ளன. ஆனால் 23, 321 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என்று கூறினார்.

கலை.ரா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.