அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் இந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பிற்கு மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
தற்போது மாணவர்கள் செமஸ்டர் தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அதன்படி இளநிலை படிப்பில் ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.225 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் மாணவர்கள் ரூ.2,050 கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பை பொறுத்தவரை ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் என்பது ரூ.450ல் இருந்து ரூ.650 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இளநிலை படிப்பிற்கான இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை படிப்பிற்கான இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.600-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 4 ஆண்டு படிப்பை முடித்த பிறகு டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் என்பது ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வானது அடுத்த செமஸ்டர் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 50 சதவீதம் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
WorldCup2023final: எகிறும் ஹோட்டல் வாடகை, விமானக் கட்டணம்… அதிரும் அகமதாபாத்
உருவானது ‘மிதிலி’: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!