74 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மெரினாவில் கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விழா அரங்குக்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.
அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை செலுத்தினார். ஹெலிகாப்டரிலிருந்து தேசிய கொடி மீது பூ மழை தூவப்பட்டது.
தொடர்ந்து இந்திய விமானப்படை , ராணுவப் படை, கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து சென்னை தலைமைக் காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
சிறந்த காவல் நிலையம்
முதல் பரிசு – திருப்பூர் வடக்கு காவல் நிலையம்,
2ஆம் பரிசு- திருச்சி, கோட்டை காவல் நிலையம்,
3ஆம் ம் பரிசு – திண்டுக்கல் வட்ட காவல் நிலையம்
பிரியா
சாதனைகளை படைத்த பதான்: முதல் நாள் வசூல் எவ்வளவு?
குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!