‘சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம்’ என்று 2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. இதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.
குழந்தைகளை மிகக் கவனத்தோடும், அக்கறையோடும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்த அரசு, 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் (ICDS) அங்கன்வாடி மையங்களைத் தொடங்கியது.
அங்கு குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் மொழியை கல்வியைக் கற்பிப்பதோடு, ஊட்டச்சத்து வாரம் மூலம் விதவிதமான கலவை சாதங்கள், புதன், வியாழக்கிழமைகளில் முட்டை, பயறு வகைகளை வழங்கி வருகின்றனர். இங்கு பணியாற்றுபவர்களின் ஊதியம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாநாட்டில்,
‘சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம்’ என்று 2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்ததை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் வேலுச்சாமி,
“அரசு நிகழ்ச்சிகள் என்றால், கூட்டம் கூட்டுவதற்கு ஆள் திரட்டுவது அங்கன்வாடி பணியாளர்களே என்று இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’ கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாட்கள் கோடைக்கால விடுமுறை என்பதை சங்கத்தின் வாயிலாக தக்க வைத்துள்ளோம். இருப்பினும் குறைபாடுகளும் உள்ளன.
திமுக தேர்தல் வாக்குறுதியில் உள்ளபடி, அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற பிரதானக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
இது கிடைத்தால் மற்ற அனைத்தும் இவர்களுக்குக் கிடைத்துவிடும். இவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தற்போது அவரது புதல்வரே முதல்வராக உள்ளதால் அரசு ஊழியர்கள் கனவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை ஆரோக்கியமானதா?
டாப் 10 நியூஸ் : தேசிய விண்வெளி தினம் முதல் கொட்டுக்காளி, வாழை ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!
கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை