கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

Published On:

| By Selvam

பொதுவாகவே கோடையில் எல்லாருடைய உடல் நலத்துக்கும் ஏற்றது கீரை.  வழக்கமாக பருப்பு சேர்த்து கீரை உணவுகளைச் சமைப்பவர்கள் வித்தியாசமாக இந்த ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல் செய்து ருசிக்கலாம். இந்த சம்மரை, ஹெல்த்தி சம்மராக்கலாம்.

என்ன தேவை?

அரைக் கீரை – ஒரு கட்டு
தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
பூண்டு – 4 பல் (நசுக்கிக்கொள்ளவும்)
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கீரையை சுத்தம் செய்து நறுக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு  தாளித்து, கீரைக் கலவையோடு சேர்த்து, உப்பு போட்டு நன்கு கடைந்து பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி சட்னி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel