அன்புஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

தமிழகம்

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு இன்று (பிப்ரவரி 18) சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் ஆதரவற்றோர் மற்றும் மன நலம் குன்றியோருக்கான அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆசிரமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த ஜெபருல்லா என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உறவினர்கள் அவரை வந்து பார்த்தபோது ஜெபருல்லா பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் பெங்களூருக்கு சென்று பார்த்தபோது ஜெபருல்லா உள்பட 15 பேர் ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றனர் என்று பெங்களூரு ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜெபருல்லாவை காணவில்லை என்று அவரது உறவினர் சலிமான் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் காவல்துறை மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் ஆசிரமம் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட திருப்பூரைச் செர்ந்த ஜெபருல்லா, சங்கரன் கோவிலைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், முத்து விநாயகம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பத்மா, புதுச்சேரியைச் சேர்ந்த நடராஜன், காளிதாஸ் ஆகியோரை காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் கெடார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஆசிரமம் சீல் வைக்கப்பட்டு நிர்வாகி ஜூபின் பேபி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆசிரம வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!

யுஜிசி நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *