பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 29) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது, பருவ மாற்றத்தால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவத் துறை தெரிவித்திருந்தது.
அதேசமயத்தில் இன்ஃபுளுயன்ஸா வைரஸ், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாகக் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
சோதனை முடிவில் அவருக்குப் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இரண்டு நாள் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் இன்று (செப்டம்பர் 29) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
அவர் ஒரு சில தினங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மோனிஷா
உலக இதய தினமும்… யுவன் சொன்ன அட்வைஸும்!
எடப்பாடி பொதுக்கூட்டம் : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது!