தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. திங்கட்கிழமையன்று தீபாவளி வருவதையொட்டி சென்னையில் இருந்து நேற்று முதல் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து செல்கின்றனர்.
நேற்று ஒருநாள் மட்டும் சென்னையில் இருந்து 3,300 பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி விடுமுறையை கொண்டாடும் விதமாக அதற்கு மறுநாளும் (அக்டோபர் 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று சமூகவலை தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார்.
அப்போது தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு,”தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இந்த விடுமுறையானது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். எனவே இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?
நிறையும் குறையும்: சர்தார் விமர்சனம்!