அதிகரிக்கும் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா?: அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகம்

தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பரவி வரும் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஏதாவது வைரஸ் தொற்றாக இருக்குமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமதாஸ் அறிக்கை

குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகமாகப் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நோய்ப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல

காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம்.

பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன் விளக்கம்

இதனைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 18) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காய்ச்சல் பரவலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் காய்ச்சல் குறைந்தவுடன் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

இதனால் ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

அன்பில் மகேஷ் விளக்கம்

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 19) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்துப் பேசியுள்ளார். ”பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை மட்டும் முடிவெடுக்க முடியாது.

முதல்வர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

வழக்கமாக சுகாதார நெருக்கடி காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையுடன் இணைந்து கூட்டம் நடத்தப்படும். அதில், ‘முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி விட்டு அமர வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகள் அளிப்பார்.

ஆலோசனைகளை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளோடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக வெளியிடும். இந்த நிலையில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து என்ன அறிவுறுத்தல் வருகிறதோ அதைப் பின்பற்றுவோம்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடரும் காய்ச்சல் காரணமாக ஏற்கனவே புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்குச் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சு. பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *