தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதற்கிடையில், டிசம்பர் மாதம் நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பாக இன்று (டிசம்பர் 4) சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் ” பள்ளி கல்வித் துறை சார்பில் பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்தின் தலைமை கல்வி அதிகாரிகளுடன் (CEO) நேற்று (டிசம்பர் 3) மதியம் காணொளி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அவர்களிடம் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தோம். மேலும், கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன என்று அவர்கள் கூறினார்கள்.
டிசம்பர் 2-ஆம் தேதிகளிலிருந்து பிராக்டிக்கல் தேர்வுகள் ஆரம்பிக்க வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பிராக்டிக்கல் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், ஜனவரி முதல் வாரத்தில் அதை நடத்தி முடித்து விடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுக்கான டைம் டேபில் முன்பு அறிவித்திருந்தோம். அதன்படி தேர்வுகள் நடைபெறும். எங்கெல்லாம் மழை வெள்ளத்தால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறோம்.
அதை மீறியும் தேர்வுகளை நடத்த முடியாவிட்டால், அல்லது மாணவர்களால் பள்ளிக்கு வர முடியாவிட்டால், அந்த தேர்வுகளை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அந்தந்த மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். எங்களுக்கு மாணவர்களின் பாதுகாப்புத்தான் முக்கியம்” என்று கூறினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இரட்டை இலை… ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
உத்தரப் பிரதேச வன்முறை… காசிப்பூர் எல்லையில் ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்!