பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும். சிறந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும். பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்வம்