இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: வாணி ஜெயராம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்!

தமிழகம்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வாணி ஜெயராமின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ள மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று (பிப்ரவரி 4 ) காலமானார்.

அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 4 ) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர்.

தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன்.

அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எப்படிடா இருக்க? நம்பர் ஒன் பவுலர் சிராஜை பாராட்டிய அஷ்வின்

சென்னை கண் சொட்டு மருந்து : அமெரிக்காவில் ஒருவர் பலி… 5 பேர் பார்வையிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *