விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!

தமிழகம்

கடலூரில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது 8 வயது மகள் ஜனுஷிகா. வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

மூன்றாம் வகுப்பு படித்து வந்த ஜனுஷிகா தினசரி தனது தாயுடன் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இன்று ஜனுஷிகாவின் அம்மாவுக்கு வேறு வேலை இருந்தால் தந்தையுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் தனது தந்தையுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார் ஜனுஷிகா. இருசக்கர வாகனத்தில் சிலுவைபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, புவனகிரிகியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் ஜனுஷிகாவும், அவரது தந்தை ஜம்புலிங்கமும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, டாரஸ் லாரி சிறுமி மீது எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை ஜம்புலிங்கம் லேசான காயங்களுடன் தப்பினார். தந்தையின் கண்முன்னே சிறுமி விபத்தில் உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கருப்பர் நகரம்: இயக்குநர் பொறுப்பில் இருந்து கோபி நயினார் வெளியேற்றம்!

அயலானுக்காக களமிறங்கிய பிரபல நடிகர்… பொங்கல் ட்ரீட் லோடிங்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *