தீபாவளியை முன்னிட்டு ரூ.499 விலையில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் தொகுப்பின் விற்பனையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோபாலபுரத்தில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் இன்று (அக்டோபர் 22) தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (அக்டோபர் 22) வெளியிட்ட அறிக்கையில் ” தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் முதலமைச்சரின் ஆணைப்படி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு லாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக் காலங்களைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை லாப நோக்கமின்றி ரூ.499 விலையில் அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு என்ற பெயரில் இன்று (அக்டோபர் 22), சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
மஞ்சள்தூள். உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த மளிகைத்தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம்,அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மீண்டும் கார் ரேஸராக அஜித் : ஏகே ரேஸிங் அணியின் லோகோ வெளியானது!
கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி
“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” ஸ்டாலின், சந்திரபாபுவின் கருத்துக்கு மக்களின் பதில்!