உள்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அமுதா ஐஏஎஸ் க்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம், மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி மதுவிலக்கு, காவல்துறைக்கு பொறுப்பு வகித்து வந்த உள்துறைச் செயலாளர் அமுதா மாற்றப்பட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அமுதா.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமுதா, முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாகவும், மக்களுடன் முதல்வர், பொதுமக்கள் குறை தீர்க்கும் திட்டங்களின் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
“உள் துறைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அமுதாவுக்கு முதல்வரோடு அலுவலக ரீதியான நெருக்கம் குறைந்துவிட்டது என்று அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில்… முதல்வரே நேரடியாக தொடர்புடைய முக்கிய குறை தீர்க்கும் திட்டங்களின் சிறப்பு அதிகாரியாக அமுதா நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
–வேந்தன்
ப்ளூ ஸ்க்ரீன் எரர்… சென்னை டூ அமெரிக்கா வரை ஸ்தம்பித்த கணினி வேலைகள்
வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் எங்கெங்கு மழை?