துலுக்கர்பட்டி அகழாய்வு குறித்து நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(ஜூலை 4) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு முதற்கட்ட அகழாய்வு பணியின் போது பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த ஜூன் 6 ஆம் தேதி 2-வது கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த அகழாய்வு பணியின்போது தமிழ் எழுத்துகளில் புலி என்று பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், துலுக்கர்பட்டி அகழாய்வு குறித்து நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 4) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.

நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மின்னம்பலம் எதிரொலி: அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி… மறு விசாரணைக்கு உத்தரவு!
இந்திய, சீன தலைவர்களுடன் இணையும் புதின்
சரத் பவார் வழியில் அஜித் பவார்: மகாராஷ்டிராவின் திருப்புமுனை கதை!