தரமற்ற உணவு: அம்மா உணவகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

தமிழகம்

மூன்று நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா உணவக பணியாளர்களுக்கு கடலூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடலூர் மாநகராட்சியில், அரசு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு பணி புரிந்துவந்த 16 பெண் பணியாளர்களை கடலூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும், புதிய நிர்வாகிகளிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

amma unavagam cuddalore

ஆனாலும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரனை சந்தித்தார்.

அப்போது, ”அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர்கள் அரசியல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சார்பில் அம்மா உணவகத்தில் பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

amma unavagam cuddalore

அதில், “கடலூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் துப்புரவு ஆய்வாளர் ஆய்வின்போது, அதிகாலையில் சமைக்கப்பட்ட உணவு, மதியம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வரை தினசரி 3600 ரூபாய் செலுத்தி உள்ளனர். ஆனால், தற்போது 1000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.

இதனால் அம்மா உணவகம் விதிமுறைகளின்படி செயல்படவில்லை. ஆகையால் இது போன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் 3 தினங்களுக்குள் எழுத்துமூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இதனை மீறும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. பிரகாஷ்

நயன்தாராவின் ’கனெக்ட்’: என்ன ஸ்பெஷல்?

முதல்வர் குறித்து விமர்சனம்: பாஜக நிர்வாகி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *