கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் முரப்பா !
நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க நெல்லிக்காய் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. உடல் எடையைக் குறைக்க உதவும் இந்த நெல்லிக்காய் முரப்பா, செரிமானப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். தற்போது அதிக அளவில் கிடைக்கும் நெல்லியில் முரப்பா செய்து வைத்து கொண்டு நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
என்ன தேவை?
பெரிய, முற்றிய நெல்லிக்காய் – ஒரு கிலோ
படிகாரம் – அரை டீஸ்பூன் (நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்)
தண்ணீர் – தேவையான அளவு
பாகு செய்ய…
சர்க்கரை – ஒன்றரை கிலோ
தண்ணீர் – ஒரு லிட்டர்
கறுப்பு உப்பு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
நெல்லிக்காய்களை இரண்டு நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிகட்டவும். பிறகு, சுத்தமான துணியால் துடைத்து, முள் கரண்டியால் ஆங்காங்கே குத்தவும். ஒன்றரை லிட்டர் தண்ணீருடன் படிகாரம், ஊறிய நெல்லிக்காய் சேர்த்து மீண்டும் இரண்டு நாள்கள் ஊறவிடவும். படிகாரத்தில் ஊறிய நெல்லிக்காய்களை வடிய வைத்து எடுக்கவும். பாகு செய்ய கொடுத்த சர்க்கரையுடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்த பின் நெல்லிக்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். நடு நடுவே கிளறி விடவும். நெல்லிக்காய் வெந்து பாகு பாதியாகச் சுண்டிய பின் கறுப்பு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பாகு தேன் மாதிரி கெட்டியாக வந்ததும் இறக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: 2 நாள் சட்டமன்றம்… அமைச்சர்கள் மீது கோபத்தில் ஸ்டாலின்
வைக்கம் போராட்டத்தில் சீமானா? – அப்டேட் குமாரு
தூத்துக்குடியில் செயல்பாட்டுக்கு வந்த கனிமொழியின் கனவுத் திட்டம்!
பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்ற கூடாது? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
திருவண்ணாமலை தீப திருவிழா… போலி பாஸ் நடமாட்டம்? : பக்தர்களே உஷார்!
சரியாக முத்தம் கொடுக்காத நடிகை: நடிகர் மோகன்பாபு செய்த காரியம்!