சர்க்கரை நோயாளிகளின் ஃபேவரைட்டாக இருக்கிறது நெல்லிக்காய். நெல்லிக்காயில் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடும் அவர்களுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த அல்வா செய்து கொடுக்கலாம். Amla Halwa Recipe in Tamil
என்ன தேவை?
பெரிய நெல்லிக்காய் – 15
வெல்லம் – 150 கிராம்
சர்க்கரை – அரை கிலோ
அரிசி மாவு – 100 கிராம்
சோள மாவு – 100 கிராம்
நெய் – 150 மில்லி
எப்படிச் செய்வது?
10 நெல்லிக்காயை சுத்தம் செய்து, அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெல்லிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். அடி கனமான கடாயில் நெல்லிக்காய் சாறு, வெல்லப்பாகு, சர்க்கரை, நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி மாவையும், சோள மாவையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் ஜூஸ் நன்றாக கொதித்து வரும்போது மாவு கரைசலை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பச்சை வாசனை போகும்வரை கிளறி, பிறகு நெய் சேர்த்து வேகவிடவும். நன்றாக அல்வா திரண்டு வரும் தறுவாயில், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.