கிச்சன் கீர்த்தனா : ஆலு – புதினா பரோட்டா

தமிழகம்

பொதுவாக, பரோட்டா சாப்பிட வேண்டுமென்றால் கடைகளுக்குத்தான் சென்று சாப்பிட வேண்டியிருக்கும். தற்போது யூடியூப்களில் வெளியாகும் செய்முறையை வைத்து பலவிதமான பரோட்டாக்களைச் செய்துவிடுகிறார்கள்.

ஆனால் அவையெல்லாம் உடலுக்கு ஏற்றதா என்பது சந்தேகம்தான். அப்படியில்லாமல், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த ஆலு – புதினா பரோட்டாவை வீட்டிலேயே செய்து இந்த வீக் எண்டைக் கொண்டாடுங்கள்.  

என்ன தேவை?

கோதுமை மாவு – ஒன்றரை கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய புதினா – 2   டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை   டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை  டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும்.

உருளைக்கிழங்கை  வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லித்தூள், சீரகத் தூள், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதுவே ஸ்டஃபிங் ஆகும்.

பிசைந்து வைத்த மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும்.

பிறகு, சற்று கனமான பரோட்டாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, தேய்த்த பரோட்டாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

புரொக்கோலி பாலக் கூட்டு

பச்சைப்பட்டாணி கோதுமை பரோட்டா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments are closed.