பிரபலமான உணவகங்களுக்குச் சாப்பிட செல்பவர்களின் பிரதான சாய்ஸ் ஆலு கோபியாகத்தான் இருக்கும். சாப்பாத்தி, பரோட்டாவுக்கு சைடிஷாக அமையும் இதை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பிரியாணி இலை – 2
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – பூண்டு – தலா 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – முக்கால் டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
பெங்களூரு தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
வெண்ணெய் – 30 கிராம்
ஆம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்
காலிஃப்ளவர் – ஒன்று (இதிலிருந்து 10 பூக்களை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 2 (பிறை நிலா போல நறுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உருளையை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும். அதே கொதிநீரில் காலிஃப்ளவர், சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து சீரகம், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் தக்காளியை சேர்த்து மைய வதக்கவும்.
இதில் ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்த நன்கு வதக்கவும். இந்தக் கலவையில் வேக வைத்து தோல் உரித்த உருளை, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். தீயை சிம்மில் வைத்து மூடிபோட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.