purchase of 1000 new buses

தமிழ்நாட்டிற்கு 1,000 புதிய பேருந்து வாங்க நிதி ஒதுக்கீடு!

தமிழகம்

தமிழ்நாட்டிற்கு புதிதாக 1,000 பேருந்துகள் வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளைச் சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக 1,000 பேருந்துகள் வாங்கவும் ஏற்கனவே உள்ள 500 பழைய பேருந்துகளை பழுதுபார்க்கவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு தலா ரூ.41.2 லட்சம் செலவில் 800 புதிய பேருந்துகளும் என மொத்தம் 446.60 கோடி ரூபாய் செலவில் பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் உள்ள 500 பேருந்துகள் பழுதுபார்ப்பதற்காக மொத்தம் ரூ.53.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள 1,000 பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் நடப்பு நிதியாண்டிற்குள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகளை இயக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகளை உடனடியாக நிறுத்தினால் பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்து போக்குவரத்து வசதி தடைப்படும். எனவே, புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே புதிய பேருந்துகள் வாங்கி 6 மாத கால சோதனை ஓட்டம் நிறைவடைவதற்குள் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகள் படிப்படியாக கழிவு செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

செந்தில் பாலாஜி சகோதரருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *