கல்லால் பல்லை உடைத்தார்: பல்வீர் சிங் மீது இன்னொரு புகார்!

தமிழகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் வி.கே. புரம் ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்து சித்ரவதை செய்த புகாரில்  சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் பல புகார்கள் எழுந்துள்ளன. பாப்பாக்குடி காவல் நிலையத்திலும் பல்வீர் சிங் சித்திரவதை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி அமுதா இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று (ஏப்ரல் 12) வெளியிட்டுள்ள செய்தியில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கல்குவாரி மேற்பார்வையாளரை தாக்கிய வழக்கில் மகாராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட மூவரை  விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 12 ஆம் தேதி பாப்பாக்குடி காவல்நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். 

எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய மகாராஜா, “ஒரு போலீஸ்காரர் காலையில் என் வீட்டிலிருந்து பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.  சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் விசாரணை நடத்தி என்னை சிறிது நேரம் காத்திருக்க வைத்தார்.

பல்வீர் சிங் வந்தவுடன், நான் மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு பல்வீர் சிங் மற்றும் இரண்டு பேர் வந்தனர். பல்வீர் சிங் ஷார்ட்ஸ், டி-சர்ட் மற்றும் வெள்ளை கையுறை அணிந்திருந்தார். மற்ற இருவர்  தங்களுடன் கற்களை கொண்டு வந்தனர். அவர்கள் என் கைகளை பின்னால் மடித்துப் பிடித்தார்கள்.

பல்வீர் சிங் என் பற்கள் மற்றும் ஈறுகளை கற்களால் தேய்த்தார். எனக்கு வலி தாங்க முடியவில்லை. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சில நிமிடங்களில் என் பற்களை உடைத்தார். நான் துடித்தேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இரவில் செல்லில் அடைக்கப்பட்டேன். மறுநாள் ஆலங்குளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டேன்.

மேலும்  தவறி விழுந்ததில் வாயில் காயம் ஏற்பட்டதாக மாஜிஸ்திரேட்டிடம் கூறுமாறு போலீசார் என்னை கட்டாயப்படுத்தினர்.

மன்னார்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.  கோவிட்-19 பரிசோதனைகளை முடித்தார்கள். ஆனால் என்   வாயில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.  அம்பாசமுத்திரம் சப் ஜெயிலில் அடைத்தார்கள்.

என்னால் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை. தாங்க முடியாத வலியால் நான் துடித்ததால் பிறகு  அம்பாசமுத்திரம் சப்-ஜெயிலில் இருந்து என்னை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் ஜி.எச்.க்கு அழைத்துச் சென்றனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு எனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மார்ச் 23 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டேன ”என்று தனக்கு பல்வீர் சிங்கால் நேர்ந்த அனுபவத்தைக் கூறியிருக்கிறார் மகாராஜா.

இதேபோல் மேலும் இருவரும் பல்வீர் சிங்கால் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேந்தன்

10.5% இட ஒதுக்கீடு தாமதம்: பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

நட்சத்திர வீரர்களுக்கு காயம்: எச்சரித்த ரவி சாஸ்திரி

allegations of custodial violence
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *