சென்னை – கோவை வந்தே பாரத்: டிக்கெட் விலை எவ்வளவு?

தமிழகம்

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஏப்ரல் 7) முதல் துவங்கியது.

சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) துவங்கி வைக்கிறார். ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று துவங்கியது.

இந்த ரயிலானது புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. 8 குளிர்சாதனப் பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 536 இருக்கைகள் இருக்கும். 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 7.12 மணி, சேலத்திற்கு காலை 7.58 மணிக்கு வந்தடைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை 11.50 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மாலை 5.48 மணிக்கும், ஈரோட்டிற்கு மாலை 6.32 மணி, திருப்பூருக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடைந்து கோவை ரயில் நிலையத்திற்கு இரவு 8.15 மணிக்கு சென்றடையும்.

AC Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,215 கட்டணம் வசூலிக்கப்படும். AC Executive Chair Car வகுப்பில் பயணம் செய்ய ரூ.2,310 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏப்ரல் 9-ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய மூன்று மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

செல்வம்

மோடி வருகை: பாதுகாப்பு வளையத்தில் சென்னை

புஷ்பா 2 – டீசர் எப்படி?

+1
0
+1
5
+1
0
+1
4
+1
0
+1
2
+1
1