முருகன் உட்பட மூவரும் ஒரு வாரத்தில் இலங்கை செல்வார்கள் : தமிழ்நாடு அரசு

தமிழகம்

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தற்போது பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் மத்திய அரசு அனுமதியுடன் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்  திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற நேர்காணலில்  பங்கேற்றனர்.

இதனையடுத்து தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு லண்டன் செல்ல முருகனுக்கு விசா தேவைப்பட்டது. எனவே, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கை மறுவாழ்வுத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தற்போது பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

உரிய அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, முருகன் தொடர்ந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“இனி பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது” : அகிலேஷ் யாதவ்

மதிமுகவுக்கு பம்பரம்? தேர்தல் ஆணையம் சொன்ன முக்கிய பதில்!

CWC 5: என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *