மழை பாதிப்பால் சென்னையில் புறநகர் ரெயில்கள் நேற்று இயங்காத நிலையில் இன்று (6.12.2023) முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில் பேசின் பாலம் – வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதுதவிர, ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது.
இதுபோல, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் – பூங்கா ரயில் நிலையம் இடையே, தாம்பரம் – பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால்,சென்னையில் புறநகர் ரயில்கள் நேற்று இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்றும் 30 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவல்லி கஷாயம்
சென்னை என்னும் பொண்டாட்டி: அப்டேட் குமாரு