தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் 31 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால், இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்” என தெரிவிக்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!
வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!