சென்னையின் மிகவும் பிசியான இடங்களுள் ஒன்று பாரீஸ் கார்னரில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற வளாகம்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த வளாகம் ஆண்டில் ஒருநாளை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயங்கி கொண்டே இருக்கும்.
அதாவது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 நுழைவு வாயில் கதவுகளும் ஆண்டுக்கு ஒருமுறை முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி வழக்கமான சம்பிரதாயமாக இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை ஒரு நாள் முழுவதும் உயர்நீதிமன்ற கதவுகள் மூடப்படுகிறது.
தினமும் சாமானியர்கள் முதல் லட்சாதிபதிகள் வரை வந்து செல்லும் இந்த வளாகம், ’மக்களுக்கான பொது இடம் அல்ல’ என்பதை நினைவூட்டும் விதமாக கதவுகள் மூடப்படுகிறது.
அதன்படி இந்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் யாரும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கூடுதலாக 21 இடங்களில் ’விஜய் நூலகம்’: புஸ்ஸி ஆனந்த்
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்: திருச்செந்தூரில் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!