ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்கிறது என்று Wollongong பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அலங்கார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக துளிர் அமைப்பு நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நேற்று (ஜனவரி 24) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா Wollongong பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் சமூகப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் அலங்கார் ஷர்மா கலந்துகொண்டு, ‘சிறுவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் ஆண்மை: மூன்று புள்ளிகளையும் இணைத்தல்’ என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் அலங்கார் ஷர்மா பேசும்போது, “ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சமூகத்தில் தொடர்கிறது.
ஆண்கள் தங்கள் வாழ்க்கையை பாலினமாக பார்க்க மாட்டார்கள். எனவே, பாலின ஒழுங்கு அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கவனிப்பதில்லை.
ஆணாதிக்க சமூகத்தில் பிரபலமான கட்டுமானம், ஆண்களுக்கு பாலியல் வன்முறையை அனுபவிக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதாகும்.
அவர்கள் பாலியல் தொடர்பைத் தொடங்குபவர்களாக சமூக ரீதியாக உணரப்படுகின்றனர். பாலியல் உதவியை நாடுவது பற்றி அவர்கள் கவலைப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், சமூகத்தில் நிலவும் ஓரினச்சேர்க்கையின் மீதான களங்கமாகும்.
ஆண்மையின் ஆணாதிக்க கட்டுமானத்தின் குறுகிய மற்றும் உறுதியான எதிர்பார்ப்பு என்பது சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அடக்குமுறை சூழ்நிலைகளை உருவாக்குவதாகும்.
இந்தியாவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த ஆராய்ச்சி தகவல்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, இதில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்” என்று அலங்கார் ஷர்மா தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…