ஆளுநர் அழைப்பு… அஜித் ஆப்சென்ட்!

Published On:

| By christopher

ajith not attend the governor meet

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற பத்ம விருது வென்றவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. ajith not attend the governor meet

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பத்மவிருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித்குமார், பரத நாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, வேலு ஆசான் (கலை), குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையற்கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் – கல்வி – இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் – கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை) மற்றும் ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் – கல்வி), கிரிக்கெட் வீரர் அஸ்வின் (விளையாட்டு) ஆகிய 9 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

நடிகர் அஜித் தனது படங்களின் ப்ரோமோசன் நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக கலந்துக்கொள்வதில்லை. இந்த நிலையில் அவர் ஆளுநர் ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டு விழாவில் கலந்துக்கொள்வாரா என கேள்வி எழுந்தது.

அஜித், அஸ்வின் மிஸ்ஸிங்! ajith not attend the governor meet

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பத்ம விருது வென்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஷோபனா, நல்லி குப்புசாமி, வேலு ஆசான், செஃப் தாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனினும் நடிகர் அஜித், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

அஸ்வின் கலந்துக்கொள்ளாத நிலையில் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share