ஏர்போர்ட் அப்டேட்!

தமிழகம்

சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 14) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிக்கள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.

வருகை

சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் காலை 9.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தடைகிறார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மதியம் 2.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வருகிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு சென்னை வருகிறார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னை வருகிறார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் இருந்து இரவு 7.40 மணிக்கு சென்னை வருகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு சென்னை வருகிறார்.

இத்துடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) ஐ.ஜி அஞ்சனா சின்கா, எஸ்.பிரபாகரன், அப்துல் ரஹ்மான் மற்றும் சேதுராம பஞ்சநாதன் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வருகின்றனர்.

புறப்பாடு

ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா சென்னையில் இருந்து காலை 10.40 மணிக்கு விசாகப்பட்டிணம் செல்கிறார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை 5 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

கோவா மாநில அமைச்சர் விஸ்வநாத் ரானே மாலை 5.50 மணிக்கு கோவாவுக்கு செல்கிறார்

அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் இரவு 7.15 மணிக்கு டெல்லி செல்கிறார்.

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் இரவு 8.15 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை மாற்றிய தோனி

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *