ஸ்தம்பித்த சென்னை : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் விமான சாகச நிகழ்ச்சி!

தமிழகம்

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் போர் விமானங்களின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரஃபேல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக போர் விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், டகோட்டா உள்ளிட்ட 72 விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

இதையொட்டி சென்னை மெரினாவில் அலை கடலென மக்கள் கூட்டம் குவிந்தது.

10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத  வகையில் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காணாத மக்கள் கூட்டத்தை சென்னை மெரினா கண்டுள்ளது.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, அடையாறு செல்லும் வழிகளில் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன.

திருவல்லிக்கேணி சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சிறு சிறு கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தது.

ஒரு சிலர் தண்ணீர் கூட கிடைக்காமல் சாலையில் செல்லும் மற்றவர்கள் கையில் தண்ணீர் வைத்திருந்தால் அதை வாங்கிக் குடிப்பதையும் காணமுடிந்தது.

விமான சாகச நிகழ்ச்சி முடிந்து 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இன்னும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.

போதிய பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கவில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற உள்ளது என்று விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரஜினி உடல் நிலை பாதிக்கப்பட ‘கூலி’ படம் காரணமா? லோகேஷ் விடுத்த அவசர அறிக்கை!

மெட்ரோவில் அலைமோதும் கூட்டம்… பயண நேரத்தில் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *