இந்தியாவிலேயே சுத்தமான காற்று கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் நெல்லை முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்திய நகரங்களின் காற்று தர குறியீடு ஆய்வு 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நெல்லை மாநகரம் சுத்தமான காற்று கொண்ட நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. நகரத்தின் குறைந்த மாசு காரணமாக காற்றில் பி.எம் 10 துகள்கள் குறைந்து காணப்படுகிறது. அதாவது AQI 33 ஆக உள்ளது. அதோடு, சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளும் இருப்பதால் நெல்லை நகரம் தனது மக்களுக்கு சுத்தமான காற்றை வாரி வழங்குகிறதாம்.
AQI 50 க்கு குறைவாக இருந்தாலே தரமான காற்று மக்களுக்கு கிடைக்கிறது என்று எடுத்து கொள்ளலாம். 300க்கு மேல் இருந்தால் வாழவே முடியாத நகரம் என்று சொல்வார்களே அப்படி எடுத்து கொள்ளலாம்.
நெல்லைக்கு அடுத்த இடத்தில் அருணாசலபிரதேசத்தின் நாகர்லாகுன் நகரம் இருக்கிறது. இங்கு AQI 43 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் கர்காடகாவின் மெடிகேரி, விஜயபுரா நகரங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர் நகரம் 5வது இடத்தில் உள்ளது. இங்கு, AQI 55 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் கர்நாடகாவின் கொப்பால் உத்தரபிரதேசத்தின் வாரணாசி, கார்நாடகாவின் ஹூப்பாளி, கேரளாவின் கண்ணூர் மற்றும் 10வது இடத்தில் சட்டீஸ்கரின் சால் நகரம் உள்ளது.
மோசமான காற்று மாசுகொண்ட நகரங்களில் தலைநகர் டெல்லி( AQI 357 ) முதலிடத்தில் உள்ளது. காசியாபாத், பிர்ன்ஹிட் , சண்டிகர் , ஹாபூர், தன்பாத், பெட்டி, கிரேட்டர் நொய்டா, குஞ்சமெரா, நொய்டா நகரங்கள் மோசமான காற்று மாசு நகரங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்