சென்னை விமான தின கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நாளை (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மாற்றம் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
போக்குவரத்து மாற்றம் (காலை 7 முதல் மாலை 4 வரை)
- காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- இதேபோல். பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு. டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகணங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாவை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:
காமராஜர் சாலை:
கடற்கறை சாலை VIP & VVIP கார் பார்க்கிங், பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி, (நீல வண்ண பாஸ் மட்டும்)
சாந்தோம் சாலை
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி , செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்)
ஆர்.கே.சாலை
MRTS-லைட் ஹவுஸ் சாலை, NKT பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளி
வாலாஜா சாலை
கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம்
அண்ணாசாலை
தீவுதிடல் மைதானம்,PWD மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை
மேலே குறிப்பிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 09.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக, 06.10.2024 அன்று சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க, MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
MTC சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர் கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுக்கு சுமார் 5,500 போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
–அப்துல் ரஹ்மான்
(புகைப்படங்கள்: அ.மணிகண்டன்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜாமீனில் வெளியே வந்த மகா விஷ்ணு… ஆதரவாளர்கள் ஆரவாரம்!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!