தீபாவளி: மூன்று மடங்காக உயர்ந்த விமான கட்டணம்!

Published On:

| By Kavi

Air fares Increased 3 times due to Diwali in chennai

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் தற்போது பெரும்பாலான மக்கள் விமானப் பயணத்தைத் தேர்வு செய்து வருவதால் விமான கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்கள், பஸ்களில் டிக்கெட்கள் இல்லை. ஆம்னி பஸ்களிலும் அரசு சிறப்புப் பேருந்துகளில் செல்பவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் விமான பயணத்தைத் தேர்வு செய்து வருகிறார்கள்.

மேலும் பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதைபோல விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.

வழக்கமான கட்டணத்தை விட தற்போது மூன்று மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. ஆனால் இன்றும், நாளையும் இதன் கட்டணம் ரூ.11,504 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி- ரூ.13,287, கோவை – ரூ.13,709, திருச்சி – ரூ.13,086, மதுரை – ரூ.13,415 ஆக உயர்ந்துள்ளன. விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டணத்தைப் பற்றி யோசிக்காமல், விமான பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன். கீர்த்தனா : டிரை ஃப்ரூட் லட்டு!

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை சாத்தியமா?… உலக நாடுகளின் வேலை நேரங்களை பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel