திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் மர்ம நபர்களால் இன்று (ஜூலை 17) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் மாவூத்துப்பட்டியை சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சந்திரபாண்டியன். இவர் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி 4-ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். தொடர்ந்து நான்கு முறையாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்.
மதுரை திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள லிங்கவாடியில் தனது மகளை பார்ப்பதற்காக சந்திரபாண்டியன் இன்று இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சந்திரபாண்டியனை பாலமேடு பகுதியில் வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சந்திர பாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சந்திரபாண்டியன் கொலை தொடர்பாக பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
திகார் செல்லும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி?