தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது.
ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர்கள் நியமனத்துக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதாவது ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆசிரியர் நியமனங்களில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதரப் பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45 ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கலை.ரா
கார்கே: அக்டோபர் 26 பதவியேற்பு!
நடிகை தற்கொலை: முன்னாள் காதலர் கைது!