ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு!
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை 58 வரை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு, உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53-ஆகவும், இதர பிரிவினருக்கு 58-ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அறிவித்தார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 22) வெளியிட்டுள்ளது.
அதில், “ பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “04.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வயது வரம்பு உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
“எல்லாம் நாடகம்” : எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்
புதுச்சேரி: சந்திரபிரியங்காவை வைத்து பாஜக ஆடும் சதுரங்க வேட்டை!
“நீங்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” : திருவண்ணாமலையில் ஸ்டாலின் பேச்சு!