Again gold and silver price increased

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 29) ஒரு சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 உயர்ந்து ரூ.5,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 48 உயருந்து ரூ.50,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6344-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 75.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 300 உயர்ந்து ரூ.75,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வெள்ளி விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளன. நாளை (மார்ச் 1) சுபமுகூர்த்தம் என்ற நிலையில் இன்று விலையில் உயர்வு ஏற்பட்டது என்ற போதிலும், நாளை குறைய வாய்ப்புள்ளது என்பதால், சற்று காத்திருந்து தேவைப்படும் நகைகளை வாங்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆரணியில் போட்டியிடும் மன்சூர் அலிகான்

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts