பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கி கைதான டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா சென்ற பிரபல யூடியூபர் TTF வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் TTF வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து வகையில் பயணம் மேற்கொண்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து டிடிஎஃப் வாசன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே டிடிஎஃப் வாசன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இயக்குனர் டூ தயாரிப்பாளர்” ராஜூ முருகன் அடுத்த படம்!