சமையலில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயம், பூண்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மக்கள் தங்களது வீடுகளில் சமைக்கும் போது பயன்படுத்தும் காய்கறிகள் பட்டியலில் வெங்காயம், பூண்டுக்கு தனியிடம் உண்டு. இவை இரண்டும் இல்லாத சமையலை காண்பது அரிது தான்.
தமிழகத்தில் பெரும்பாலோனோர் இந்த கார்த்திகை மாதம் சபரிமலைக்கு மாலை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு மழை, பனி, புயல் என பல்வேறு காரணிகளால் காய்கறிகளின் வரத்தும் சற்று குறைவாகவே உள்ளது.
இதனால் பொதுவாக காய்கறிகளின் விலை வழக்கத்தை விட உயர்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிலோ பூண்டின் விலை தற்போது 400 ரூபாயை தொட்டுள்ளது. காய்கறி கடைகளில் தரத்தை பொறுத்து 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பூண்டு விற்பனையாகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே, நாசிக் பகுதிகளில் தான் பூண்டு அதிகம் பயிரிடப்படுகிறது. அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதுவே பூண்டின் விலை அதிகரிக்க காரணம் ஆகும்.
அதே நேரம் பெரிய வெங்காயம் 1 கிலோ 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் 1 கிலோ 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், முருங்கைக்காய் 1 கிலோ 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீருக்கு தேர்தல்: அன்வர் ராஜா வலியுறுத்தல்!
ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு!