அதிமுக தலைமைக் கழக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. வெங்கடேசன் இன்று (ஆகஸ்ட் 31) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமைக் கழகத்தில் ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற கலவரம் காரணமாக, சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மாறிமாறி புகார்கள் கொடுக்கப்பட்டன.
அப்புகார்கள் வழக்குகளாக மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த வேலையில்தான், இந்த ஒட்டுமொத்த வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. வெங்கடேசன் இன்று (ஆகஸ்ட் 31) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குக் கீழ் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தக்குமார் ஆகிய நான்கு காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் அவர்கள் முதலில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்த வழக்கில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி, வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
அதிமுக அலுவலகக் கலவரம்: எடப்பாடி, பன்னீர் ஆதரவாளர்களுக்கு ஜாமீன்!