பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்து போக்சோ வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 3-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிகாமணி (44). இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் பரமக்குடி புதுநகரைச் சேர்ந்த கயல்விழி (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 14 வயது பள்ளி மாணவி ஒருவரை கவுன்சிலர் சிகாமணியிடம் கயல்விழி அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து சிகாமணி, அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பரான மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் புதுமலர் பிரபாகன்(42), மாதவன் நகரைச் சேர்ந்த ராஜாமுகம்மது (36) ஆகியோருடன் பார்த்திபனூரில் ஓர் அறையில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதற்கு கயல்விழி, சரவணன் என்பவரின் மனைவி அன்னலெட்சுமி என்ற உமா(34) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர், காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
இதன்பேரில் டிஎஸ்பி காந்தி மற்றும் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகரன், ராஜா முகம்மது, கயல்விழி, உமா ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கைது செய்யப்பட்ட கவுன்சிலர் சிகாமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம் கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு.சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜியுடன் அண்ணாமலை டீல்: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் அதிமுகவில் இணைந்தார்
ஆடம்பரங்களைத் தவிர்க்கவும்: உதயநிதி ஸ்டாலின்