அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் 2 கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு!
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவா? உச்ச நீதிமன்றம் கேள்வி!