ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு அழகான குக்கிராமம் தான் இந்த ஆதிச்சநல்லூர்.
தாமிரபரணி நதிக்கரையில் பல இயற்கை வளங்களுக்கு இடையே ஆதிகாலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பொருட்கள் தாலிகள் மற்றும் பலவாடப் பொருட்கள் ஆகியவை இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்.
அதன்படி, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எத்தனை ஏக்கரில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது?
ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே கண்ணாடித்தளம் மேல் நின்று கொண்டு கீழே பார்வையிடும் (On Site) “உள்ளது உள்ளபடியே” என்ற அடிப்படையில் இங்கு பார்வை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பார்வைக்கூடத்தை இன்று ( ஆக 5 ) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
ஏன் இந்த ஆதிச்சநல்லூர்?
ஆதிச்சநல்லூர் பகுதியில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாலிகளை உள்ளது உள்ளபடியே என்று இங்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது.
அதற்கான இடத்தினை ஆதிச்சநல்லூரிலேயே தேர்வு செய்ய வேண்டும் என்று இங்கு வசிக்கக்கூடிய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பகுதியில் மத்திய அரசின் சார்பாக ஒரு மிகப்பெரிய ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் அதற்கு உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அதற்கான தகுந்த இடமும் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
முதுமக்கள் தாலிகளை கண்டெடுக்கப்பட்ட பகுதிகள் ஒரு சில இடங்கள் தனியார் இடமாக இருந்தன.
ஆனால் ஆதிச்சநல்லூரில் வசிக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களும் தங்களிடத்திற்கு ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் வருவது எண்ணி தாங்களாகவே முன்வந்து இங்கு அருங்காட்சியம் அமைப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கினர்.
இதனை அடுத்து அகழ்வராய்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இங்கு அமைக்கப்பட இருக்கக்கூடிய கண்ணாடி வேலைகள் மேலே நின்று கீழே பழங்கால பொருட்களை பார்க்கும் விதமாக இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இது போன்ற அருங்காட்சியகம் சீனா மற்றும் வெளிநாடுகளில் மட்டும்தான் இது போல உள்ளது என்றும் உலகத்தரம் வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் இந்த தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைய இருப்பதை நினைத்து பொதுமக்களும் தமிழக மக்களும் வரலாற்று துறை ஆர்வலர்களும் பெருமிதம் கொள்கின்றனர்.
நெல்லை சரவணன்
தூத்துக்குடியில் களைகட்டிய பனிமய மாதா தேர் திருவிழா!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: தமிழிசை ஒப்புதல்!