ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கு மக்களுக்கு 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் நுகர்வோரால் மின் கட்டணம் செலுத்த இயலும் என்றும் தெரிவித்துள்ளது.
மின் வாரிய இணையத்தளம், மின் வாரிய செயலி, கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்தும் போது தங்களது ஆதார் அட்டை நகலைக் கொடுத்தால் இணைத்துத் தருகிறார்கள்.
இதற்காக ஒவ்வொரு மின் வாரிய அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு பணியாளர் பணியமர்த்தப்பட்டு ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் மக்கள் பலரும் ஒரே நேரத்தில் மின் வாரிய அலுவலகங்களுக்குச் செல்வதால் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் எண்ணை இணைப்பது சவாலான காரியமாக உள்ளது.
சிக்கலான காரியம்
இந்நிலையில், பொதுமக்கள் பலரும் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் உள்ளதாகவும் இதற்கான கால அவகாசம் போதாது எனவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் பலர் மின் இணைப்பு குடும்பத்தில் உள்ள மூத்த நபர்கள் பெயரில் உள்ளதாகவும் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் கடினமாக உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.
கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2 கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த 2 நாள் அவகாசமானது மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியிலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுக்குமாடி கட்டத்தில் மொட்டை மாடி, காமன் வராண்டா ஆகியவை தனி நபர் பயன்பாடாக இல்லாமல் பொதுப் பயன்பாட்டில் வரும். இதனால் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான மின் கட்டணம் மானியம் இல்லாமல் முழு தொகையும் செலுத்தப்படுகிறது.
எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டிற்கு ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டாலும் மக்கள் பலரும் மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைப்பது இரண்டு நாட்களில் முடியாத காரியம் என்று கூறுகின்றனர்.
இத்தனை குறுகிய காலத்தில் ஆதார் எண்ணை இணைப்பது கடினமான இருக்கும் எனவும் இதற்கான கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
மோனிஷா
ஹாக்கர்களுக்கு பரிசு: சென்னை காவல்துறை அறிவிப்பு!
அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்!