ஆம்னி அட்ராசிட்டீஸ்: கிளாம்பாக்கம் – தாம்பரம் செல்ல பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள்!

Published On:

| By christopher

point to point bus to Tambaram

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக இடைநில்லா (Point to Point) பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்தநிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பொதுமக்களின் வசதிக்காக இன்று (ஜனவரி 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் இரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். M18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக(Point to Point) 10 நிமிட இடைவெளியில் நாளை (ஜனவரி 25) முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்கப்பட உள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தொப்பூர் பாலத்தில் கோர விபத்து: தொடரும் கொடூரங்கள்!

‘இந்தியா’ கூட்டணி போல இல்லறம்’: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel