loan for small and micro enterprises

மழையில் பாதித்த சிறு, குறு தொழில்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகம்

loan for small and micro enterprises

மழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரமாக வேலைக்கு போகாமல் மக்கள் வருமானத்தை இழந்திருந்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதியுடன் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அபராத தொகையின்றி மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனத்திற்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதன கடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல்,

மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

இந்த நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம்.

மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ள போதும், இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திடவும், கூடுதல் மிகைப்பற்று (Over Draft) வசதியினை வழங்கிடவும், கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும், காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

லிங்குசாமி இயக்கும் பையா 2: ஆனா ஹீரோ கார்த்தி இல்ல!

சின்னத்திரை நடிகையை கரம் பிடித்த ரெடின் கிங்ஸ்லி… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

loan for small and micro enterprises

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *