அதானி ஸ்பான்சர்… விருது மறுத்த தமிழ் கவிஞர்

தமிழகம்

அதானி குழுமம் ஸ்பான்சர் செய்வதால் தேவி விருது வேண்டாம் என்று பள்ளி ஆசிரியரும், கவிஞருமான சுகிர்த ராணி மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ஃபேஸ்புக் ஸ்டோரி பதிவில், ”நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பெண் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து தேவி விருது (Devi Award) வழங்குகிறது.

adanai sponser devi award tamil poet sukirtha rani refuse award

இலக்கியம் மற்றும் தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் என் சமூகப் பங்களிப்பிற்காக, தேவி விருது எனக்கு வழங்கப்படுகிறது.

அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு என் நன்றி. விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 8 ந்தேதி புதன்கிழமை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் (ITC Grand Chola Hotel) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்குச் சிறிதும் உவப்பில்லை.

எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் என் விருது மறுப்பை முறைப்படி இன்று மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து விட்டேன்.

நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

“ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும்”: அண்ணாமலை

கர்நாடக பாஜகவில் அண்ணாமலைக்கு பொறுப்பு: கமலாலய சலசலப்பு!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *