ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி இன்று (அக்டோபர் 14) முற்றுகையிட்டார்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கருக்கலைப்பு செய்தார் என்று நடிகை சாந்தினி அடையாறு காவல் நிலையத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
பின்னர் கடந்த ஜுலை மாதம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நடிகை சாந்தினி, மணிகண்டன் மீதான வழக்கை வாபஸ் வாங்கியதால் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், இன்று ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி போலீசாரல் தடுத்து நிறுத்தப்பட்டார்
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, “நான்கு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கை நான் வாபஸ் பெற்று விட்டேன்.
என்னால் தான் உன் வாழ்க்கை இந்த நிலைமைக்கு ஆனது. நான் உனக்கு இனி உதவி செய்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் வழக்கை வாபஸ் வாங்கியவுடன் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.
நேற்று அவர் என்னை மதுரைக்கு வரச் சொன்னார். நான் மதுரைக்கு சென்று அவரை சந்தித்த போது, என்னை பார்த்ததும் அவர் ஓடி ஒளிந்துவிட்டார். காவல்துறை என்னிடம் இதுகுறித்து கேட்டபோது, வழக்கை வாபஸ் வாங்கியவுடன் தலைமறைவாகி விட்டார் என்று தெரிவித்தேன்.
அவர் இப்போது ரவுடிகளை வைத்து என்னை மிரட்டுகிறார். என்னுடைய வீட்டில் மணிகண்டன் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மதுரையில் அவர் வீட்டின் உள்ளே பூட்டிக்கொண்டு இருக்கிறார்.
நான் அவர் வெளியே வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் அவர் வெளியே வரவில்லை. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
மணிகண்டன் என்னிடம் வந்து பேச வேண்டும். என்னுடைய எண்ணை தொலைபேசியில் பிளாக் செய்துள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. உடனடியாக நான் ராமநாதபுரம் வந்தபோது அவரது உறவினர்கள் என்னை அடிக்க வந்தனர்.
அவர் என்னிடம் வந்து பேச வேண்டும். வழக்கை வாபஸ் வாங்குவதற்கு முன்னாள் என்னிடம் அழகாக பேசிவிட்டு, இறுதி நேரத்தில் தலைமறைவாகி விட்டார். எனக்கு அவர் நிவாரணம் அளிக்க வேண்டும்.
அவர் இங்கு வரும் வரை நான் அவரது வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.” என்று தெரிவித்தார்
செல்வம்
ஹிஜாப் வழக்கு: இருவேறு தீர்ப்பு!- அடுத்து என்ன?
நயன் – விக்கி குழந்தை விவகாரம்: மருத்துவமனையை கண்டறிந்தது சுகாதாரத் துறை!